கோயிலிலுள்ள தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சந்நிதி எதிரேயுள்ள
நந்தி, சாந்தமாகக் காட்சியளிக்கிறது. அதனால், இந்த நந்திக்கு மூக்கணாங்கயிறு
கிடையாது. இங்குள்ள ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண
தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்)
காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம்
வேண்டிக் கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி
வழிபடுகிறார்கள்
சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
Comments
Post a Comment