Skip to main content

நமது உடல், பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டுசுழன்றுகொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது

 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே

கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டுசுழன்றுகொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க  இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. 

இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும்  பிராண சக்தியை  உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை  இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்  குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாதுஇதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே  ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு  அமைதி பெற,எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய,வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock  absorber   இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.இந்த நேரத்தில்தூங்காது  விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில்நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாதுகட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை ல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவ குறிப்புகள்

  சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

இந்துக்காலக் கணக்கீடு

  இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600 ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600 21,600 x 200 43,20,000 ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும். கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள் துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள் ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள் நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும். 1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் 71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம் என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும். 2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்) 2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும். தற்போதையபிரம்மாவின் வயது 51 .

லட்சுமி தேவி நம்மிடமே இருக்க

 புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது. சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்