Skip to main content

உங்களுக்காக சில இரகசியங்கள்

1. சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.


2.தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் 
துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

3.கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்

4.நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான  அன்ன தானம் ஆகும்.

5.வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

6.கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவ குறிப்புகள்

  சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

இந்துக்காலக் கணக்கீடு

  இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600 ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600 21,600 x 200 43,20,000 ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும். கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள் துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள் ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள் நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும். 1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் 71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம் என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும். 2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்) 2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும். தற்போதையபிரம்மாவின் வயது 51 .

லட்சுமி தேவி நம்மிடமே இருக்க

 புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது. சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்