இந்தக் கோயிலுக்கு அருகே பிரம்மனுக்குக் காட்சியளித்த ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. பெயருக்கு ஏற்ப அழகுறக் காட்சி அளிக்கிறார் பெருமாள். திருமழிசையாழ்வார் இங்கே தவம் புரிந்தாராம். இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர். இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர். பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான். இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார். இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும். முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள். யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சிதரும் நரசிம்மர்களை வழிபட்டால் செய்வினை தோஷங்கள், வீண் பயம் போன்றவை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
Comments
Post a Comment